நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தியாகராஜன் இயக்கத்தில், பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான படம் 'அந்தகன்'. இப்படத்திற்கு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து இரண்டு வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 15ல் வெளிவந்த 'தங்கலான், டிமான்டி காலனி 2,', கடந்த வாரம் ஆகஸ்ட் 23ல் வெளியான 'வாழை' உள்ளிட்ட படங்களின் போட்டிகளையும் சமாளித்து இப்படம் இன்றும் ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக வரவேற்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆன்லைன் தளங்களில் பார்க்க முடிகிறது.
பிரசாந்திற்கு மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்கான வரவேற்பைப் இப்படம் பெற்றுத் தந்துள்ளது. அடுத்த வாரம் விஜய்யுடன் பிரசாந்த் நடித்துள்ள 'தி கோட்' படம் வருகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.