சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் யுவன் இசையில், வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'தி கோட்' படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக சுமார் பத்து நாட்களே உள்ள நிலையில் இப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்குமா நடக்காதா என்ற கேள்வி இன்னமும் இருக்கிறது.
ஏற்கெனவே பலர் எதிர்பார்த்தபடி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க வாய்ப்பில்லை என்பதுதான் தற்போதைய அப்டேட். இதுவே படத்திற்கான கடைசி அப்டேட் ஆகவும் இருக்கும். விழா நடந்தால் அதில் விஜய் கலந்து கொள்ள வேண்டும், எவ்வளவு கூட்டம் வரும் என்பதெல்லாம் தீர்மானிக்க முடியாத ஒன்று.
எனவே, விஜய் தவிர மற்ற படக்குழுவினர் கலந்து கொள்ளும் விதமாக ஒரே ஒரு வெளியீட்டிற்கு முந்தைய விழா மட்டுமே நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தவிர தெலுங்கு, ஹிந்தியில் படம் வெளியாகிறது. எனவே, சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்கும் என்கிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்புகள் வரலாம்.