இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
கடந்த 2016ம் ஆண்டு வெளியான மெட்ரோ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சிரிஷ். ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய அப்படத்தில் பாபி சிம்ஹாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து ராஜா ரங்குஸ்கி, ப்ளடி மணி, பிஸ்தா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக தான் காதலித்து வந்த ஹஸ்னா என்ற பெண்ணை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டுள்ளார் சிரிஷ். நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவரது திருமணம் எளிமையாக நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து நேற்று நடந்த திருமண வரவேற்பில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் பாண்டயன், ஆர்யா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளனர்.