பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
இந்தியன் படத்தை அடுத்து கமலும், ஷங்கரும் இணைந்திருக்கும் படம் இந்தியன்- 2. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் ஜூலை 12-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பிரமோசன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தியன் 2 படம் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் பேசிய இயக்குனர் ஷங்கர், ‛‛நான் இயக்கும் படங்களை பொருத்தவரை இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற மாதிரியான ஒரு கான்செப்டில்தான் உருவாகும். இந்த படமும் அப்படித்தான் உருவாகி இருக்கிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் மீண்டும் இந்தியன் தாத்தா வந்தால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படம். இந்த படத்தின் கதைக்களம் தமிழ்நாட்டில் நடக்கிறது என்றாலும் இந்தியா முழுக்க உள்ள பல மாநிலங்களுக்கும் கதை சொல்வது போல் இருக்கும். காரணம் இந்தியா முழுக்க உள்ள குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகளை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.
இந்தியன் படத்தில் 40 நாட்கள் மேக்கப் போட்டு நடித்த கமல் சார், இந்த படத்தில் 70 நாட்கள் மேக்கப் போட்டு நடித்து இருக்கிறார். ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் அவர் மேக்கப் போட்டுக் கொண்டார். சாப்பிட முடியாது, தண்ணீர் மட்டும் தான் குடிக்க முடியும். அந்த அளவுக்கு இப்படத்தில் கமல் சார் மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்திருக்கிறார். அவருக்கு போடப்பட்ட மேக்கப்பை கலைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும். அதோடு, அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்க்கும்போது அங்கு கமலை பார்க்க முடியாது. இந்தியன் தாத்தாவை தான் பார்க்க முடியும். அந்த கதாபாத்திரமாகவே முழுமையாக மாறி போயிருந்தார்.
அதிலும் ஒரு காட்சியில் கயிற்றில் தொங்கிக்கொண்டு வேறொரு மொழியை பேசி, கையில் வரைந்து கொண்டே நடித்தார். உலகில் யாராலும் இப்படி நடிக்க முடியாது. அந்த அளவுக்கு கமல் சார் இந்த படத்தில் பிரமிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்.