பிளாஷ்பேக் : கதை நாயகனாக நடித்த மவுலி | பிளாஷ்பேக் : பர்மா அகதிகளின் கதை | ஷபானாவா இது... : குழம்பிய ரசிகர்கள் | சின்னத்திரையில் பாண்டியராஜன் | எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா |
விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்புடன் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் விஜய்சேதுபதி பல கேள்விகளுக்கு ரசிகர்கள் அறியாத பல புது விஷயங்களை பதிலாக கூறி வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரபரப்பாக வெளியானது.
ஆனால் அதன் பிறகு விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிக்கவில்லை என்கிற தகவலும் அதன்பிறகு பஹத் பாசில் அந்த படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தியும் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏன் மறுத்தீர்கள் என்கிற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளிக்கையில், “புஷ்பா பட வாய்ப்பு நான் மறுக்கவில்லை.. அதே சமயம் நீங்கள் எப்போதும் உண்மையையே பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.. அது உங்களுக்கு நல்லது இல்லை.. சில நேரங்களில் பொய் சொல்வது நன்று” என்று ஒரு புதிரான பதிலை கூறியுள்ளார்.
அப்படி விஜய்சேதுபதி தன்னை தேடி வந்த கதாபாத்திரத்தை, தான் மறுக்கவில்லை என்றால் என்ன காரணத்திற்காக அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்பதையும் நாசுக்காக சொல்ல மறுத்து விட்டார். அவர் பஹத் பாசில் நடித்த பன்வார்சிங் செகாவத் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரா, அல்லது சுனில் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரா என்பதெல்லாம் இயக்குநர் சுகுமாருக்கும் விஜய்சேதுபதிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.