புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் | நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் ? மனம் திறந்த மோகன்லால் | செல்வராகவன் நடிக்கும் ‛மனிதன் தெய்வமாகலாம்' | கடைசி படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்கை இணைக்க சொன்ன நடிகர் | மார்க்கெட்டை பிடிக்க உத்தரவாதம் கொடுக்கும் நடிகை | 27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ |
பிரித்விராஜ் இயக்கத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‛எல் 2 எம்புரான்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதற்கு முன்னதாக கடந்த வருடம் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‛ஆடுஜீவிதம்' படம் அவரது நடிப்புக்கு விருதுகளை தேடித்தந்தது. ‛குருவாயூர் அம்பல நடையில்' திரைப்படத்திலும் காமெடியில் கலக்கியிருந்தார் பிரித்விராஜ். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஆக்சனுக்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் அவர் தற்போது நடித்து வரும் ‛விலாயத் புத்தா' திரைப்படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் பிரித்விராஜ் சந்தன மரம் கடத்தும் டபுள் மோகன் என்கிற கடத்தல்காரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் எதிர் தரப்புக்கும் ஏற்படும் மோதல் மற்றும் இவருக்கும் போலீசாருக்கும் ஏற்படும் மோதல் என கிட்டத்தட்ட டீசரை பார்க்கும்போதே ஒரு புஷ்பா பீல் ஏற்படுகிறது. ஆனால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் டீசரில் ஒரு பஞ்ச் வசனம் ஒன்றையும் வைத்துள்ளார்கள். பிரித்திவிராஜிடம் ஒரு போலீஸ் அதிகாரி, “நீ என்ன புஷ்பாவா?” என்று கேட்க, “ஐயோ சார்.. அவர் இன்டர்நேஷனல்.. நான் வெறும் லோக்கல்” என்று கிண்டலாக பதில் அளிப்பது போல் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. டீசரை பார்க்கும்போதே படம் முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ளது தெளிவாகவே தெரிகிறது.