சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு கடந்த சில நாட்களாகவே கன்னட திரை உலகை பரபரப்பாகியுள்ளது. தனது காதலியான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி தேவையில்லாத டார்ச்சர் கொடுத்தார் என்பதால் சிலரின் உதவியுடன் நடிகர் தர்ஷன் இந்த கொலையை செய்துள்ளார் என்று கூறியுள்ள போலீசார், தர்ஷனுடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 10 பேருக்கு மேல் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளனர். தர்ஷனின் கைது குறித்து கன்னட திரையுலகில் உள்ள உபேந்திரா, கிச்சா சுதீப் மற்றும் நடிகை ரம்யா உள்ளிட்டோர் கூறும்போது, ரேணுகா சுவாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இன்னும் சில பிரபலங்கள் இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. நியாயம் கிடைக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக கருத்துக்களை கூறி ஒதுங்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இவர் தர்ஷனுடன் இணைந்து அர்ஜூன் மற்றும் அக்ரஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தர்ஷனின் கைது குறித்து அவர் கூறும்போது, “நான் தர்ஷனுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளேன். ஒரு நபர் ஏற்கனவே ஓரிருமுறை சில சர்ச்சையான நிகழ்வுகளில் சிக்கியதை வைத்து அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடப்பது தான். இந்த வழக்கில் தர்ஷன் குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ளாரே தவிர, அவரை நீங்களாகவே குற்றவாளி என கூறுவது தவறு” என்று கூறியுள்ளார்.
சஞ்சனா கல்ராணியின் இந்த ஆதரவு குரல் ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.