கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | கெட்டவனை அழிக்ககூடாது, கெட்டதைத்தான் அழிக்க வேண்டும் : விஜய் ஆண்டனி | 'நாகினி' ஹினா கானுக்கு புற்றுநோய் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சோனாக்ஷி படம் | மம்தா மோகன்தாஸிற்கு சரும நோய் பாதிப்பு | டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் தேவதூதன் | ஓட்டு குறைவாக வாங்கினாலும் திரிஷ்யம் நடிகைக்கு மீண்டும் கிடைத்த பதவி | சூர்யா 44 படப்பிடிப்பில் இணைந்த ஜோஜூ ஜார்ஜ் | பஹத் பாசில் படத்தால் சுகாதார அதிகாரிகளுக்கு சிக்கல் | தர்ஷனின் கைதி எண்ணை டைட்டிலாக தர பிலிம் சேம்பர் மறுப்பு |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து, வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று' . கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் தற்போது ஹிந்தியில் 'சர்பிரா' என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர் . இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்துள்ளார். ஜி. வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுதாவே இயக்கி உள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் வருகின்ற ஜூலை 12ம் தேதி அன்று திரைக்கு வருவது முன்னிட்டு இன்று இதன் டிரைலர் யூடியூபில் வெளியானது. ஏற்கனவே இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள இந்த டிரைலரில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். அவர் எந்த மாதிரியான ரோலில் நடித்துள்ளார் என ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர்.