பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் மற்றும் மம்முட்டி இருவரின் நடிப்பில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் போக்கிரி ராஜா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என தகவல் வந்தது. அரசியல் பின்னணி கொண்ட வரலாற்று படமாக உருவாகும் அந்த படத்திற்கு 'அரிவாள் சுட்டிக நட்சத்திரம்' என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் 2012ல் அறிவித்தனர். ஆனால் பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதன் பிறகு மம்முட்டியும், பிரித்திவிராஜும் இணைந்து நடிப்பது குறித்து பலமுறை பேசப்பட்டாலும் அந்தப் படம் குறித்த பேச்சோ அல்லது பெரிய அளவில் செய்திகளோ வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரித்விராஜ் நடிப்பில் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படம் வரும் மே 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்விராஜிடம், மம்முட்டியும் நீங்களும் இணைந்து நடிப்பதாக பேசப்பட்ட அரிவாள் சுட்டிக நட்சத்திர திரைப்படம் உருவாவதற்கு வாய்ப்பு உண்டா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் சில காரணங்களால், குறிப்பாக பட்ஜெட் மற்றும் அந்த படத்திற்கான பொருட்களை லொகேஷனுக்கு கொண்டு வருவதற்கான சிரமங்கள் உள்ளிட்ட காரணங்களால் மேற்கொண்டு அந்த படத்தின் வேலைகளை தொடர முடியாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அதே சமயம் இத்தனை வருடங்களில் அதே சாயல் கதையம்சம் கொண்ட சில படங்களும் வெளியாகி விட்டன. அதனால் இனி அந்த படம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதே சமயம் நல்ல கதை கிடைத்தால் மம்முட்டியுடன் நான் இணைந்து நடிப்பதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.