டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
நடிகர் அல்லு அர்ஜுன் மீது கடந்த சில வருடங்களில் போலீசார் இரண்டுக்கும் மேற்பட்ட முறை வழக்கு பதிவு செய்தனர். அது எல்லாமே அவரைப் பார்ப்பதற்காக கூடிய அவரது ரசிகர்கள் கூட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல் காரணமாகத்தான் அவர் மீது வழக்காக பதியப்பட்டன. இந்த நிலையில் தற்போது அதேபோன்று மீண்டும் அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் நேற்றும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது 2024 லோக்சபா தேர்தலில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆந்திராவில் பொருத்தவரை சட்டசபைத் தேர்தலும் இதனுடன் சேர்ந்து நடைபெற இருக்கிறது. நாளை (மே 13) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் ஆந்திராவில் உள்ள நந்தியால் தொகுதியில் போட்டியிடும் ஷில்பா ரவி எனப்படும் ரவி ரெட்டி என்கின்ற வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக அவரது வீட்டிற்கு தனது மனைவியுடன் நேரில் வருகை தந்தார்.
அவர் அங்கே வந்த விஷயம் பரவி தொண்டர்களும் அல்லு அர்ஜுன் ரசிகர்களும் அந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கில் கூடியதால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரவி ரெட்டியின் வீட்டில் பால்கனியில் இருந்து தொண்டர்களையும் ரசிகர்களையும் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார் அல்லு அர்ஜுன். அதே சமயம் இப்படி முன்னறிவிப்பு இல்லாமல் அல்லு அர்ஜுன் கூட்டத்தை கூட்டியது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி ஆந்திர போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனது மாமாவான நடிகர் பவன் கல்யாணின் தேர்தல் வெற்றிக்கு சோசியல் மீடியா பதிவு மூலமாக அல்லு அர்ஜுன் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் அவரது முழு ஆதரவு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் குறிப்பாக தனது நெருங்கிய நண்பரான ரவி ரெட்டி என்பவருக்கும் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.