இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர் வரிசைக்கு உயர்ந்து விட்டவர் நடிகர் டொவினோ தாமஸ். வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் சமீபத்தில் சினிமா பின்னணியில் உருவாகியுள்ள ‛நடிகர்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஓரளவு வரவேற்புடன் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து கிரைம் த்ரில்லர், வரலாற்று பின்னணி கொண்ட படம் என புதுப்புது கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் டொவினோ தாமஸ்.
அதே சமயம் கடந்த கோவிட் முதல் அலையின் போது இவர் நடிக்க துவங்கிய படம் தான் 'வழக்கு'. விருதுகளுக்காக படம் இயக்குவதில் புகழ்பெற்ற சணல்குமார் சசிதரன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹீரோ, இயக்குனர் சம்பளம் தவிர இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 50 லட்சம் தான் என்பதால் நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குனர் சணல்குமாரும் சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர். 2022லேயே இந்த படம் தயாராகிவிட்டாலும் இப்போது வரை இந்த படத்தை தியேட்டர்களில் வெளிவரவிடாமல் படத்தின் ஹீரோ டொவினோ தாமஸ் தடுத்து வருவதாக விரக்தியுடன் கூறியுள்ளார் இயக்குனர் சணல்குமார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரமும் டொவினோ தாமஸுக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த படம் பல திரைப்பட விழாக்களில் விருது பெறும் என்கிற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. அந்த சமயத்தில் அவர் வளர்ந்து வரும் ஒரு நடிகராகத்தான் இருந்தார். ஆனால் இந்த படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகும் நிலையில் அவர் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது இந்த படம் திரையரங்குகளில் வெளியானால் தன்னுடைய இமேஜை அது பாதிக்கும் என்று நினைத்து இந்த படத்தை ரிலீஸ் செய்வதை தவிர்த்து வருகிறார்.
அது மட்டுமல்ல, இது விருதுக்காக எடுத்த படம் தானே, அதனால் திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்கு முயற்சி செய்யுங்கள் என்று கூறிவிட்டார். ஆனாலும் பல திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிட மறுக்கப்பட்டது. அது மட்டுமல்ல ஓடிடி தளத்தில் கூட இந்த படத்தை வெளியிட வேண்டாம் என தடுத்து வருகிறார் டொவினோ தாமஸ். ஒருவேளை இந்த படம் வெளியானால் நிச்சயம் அவரது திரையுலக பயணத்திற்கு வளர்ச்சியாக தான் இருக்குமே தவிர அவருடைய இமேஜிற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்பதை அவர் உணர மறுக்கிறார். தன் மீதே நம்பிக்கை வைக்க தயங்குகிறார்” என்று ஒரு குற்றச்சாட்டாக இல்லாமல் தன்னுடைய இயலாமை நிலையை விரக்தியுடன் வெளிப்படுத்தியுள்ளார் சணல்குமார் சசிதரன்.