'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்க, மோகன் பாபுவே இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை பான் இந்தியா லெவலில் வெளியிடும் விதமாக பல முன்னணி நட்சத்திரங்களையும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் பிரபாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ் குமார் ஆகியோர் இதில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல பாலிவுட்டில் இருந்து அக்சய் குமாரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த அக்சய் குமார் தற்போது தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
“அக்சய் குமாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் நிறைய கற்றுக்கொள்ள உதவியது. நிறைய சிரிக்க வைத்தது. அதே சமயம் அவரது ஆக்சனை இப்போது மிஸ் பண்ணுகிறேன். வருங்காலத்தில் இன்னும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் விஷ்ணு மஞ்சு.