பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛லியோ'. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்து இருந்தார். விமர்சனங்களை கடந்து படம் ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
ஒருவாரத்தில் ரூ.461 கோடி வசூலித்து உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. ஆனால் வசூல் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்த கருத்து சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இந்த படத்தின் வெற்றி விழாவை நவ., 1ல் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இதை நடத்த உள்ளனர். இதில் விஜய்யும் பங்கேற்பதாக கூறப்படுகிறது. அதனால் இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி தயாரிப்பு தரப்பில் போலீஸில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
லியோ படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாய் நடத்த திட்டமிட்டனர். ஆனால் கடைசிநேரத்தில் ரத்தானது. அதனால் படத்தின் வெற்றி விழாவை இப்போது பிரமாண்டமாய் நடத்த திட்டமிட்டுள்ளனர்.