63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு | நடுநிலையாளர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை: தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை | பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி 'மாஸ்டர், லியோ' ஆகிய படங்களில் இணைந்தது. இரண்டுமே வசூல் ரீதியாக வெற்றிப் படங்கள்தான். இருந்தாலும் விமர்சன ரீதியாக 'மாஸ்டர்' படத்தை விடவும், 'லியோ' படத்திற்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக படத்தில் இடம் பெற்ற பிளாஷ்பேக் காட்சிகளுக்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தது.
அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் லோகேஷ். “விஜய் படம் என்றாலே ஒரு 'இன்ட்ரோ சாங்' கண்டிப்பாக இருக்கும். ஆனால், 'லியோ' படத்தில் அப்படி எதுவும் வைக்க முடியவில்லை. அப்படியான ஒரு பாடல் வேண்டும் என்று தயாரிப்பு தரப்பிலும் மார்க்கெட்டிங் தரப்பிலும் கேட்டார்கள். அதனால், இரண்டாவது பாதியில் பிளாஷ்பேக்கை ஒரு பாடலுடன் ஆரம்பித்திருப்பேன்.
பிளாஷ்பேக் 30 நிமிடங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அப்படி வைத்தால் படத்தின் நீளம் அதிகமாக வந்துவிடும் என்பதால் அதை 18 நிமிடங்களாகக் குறைத்தேன். அதனால்தான் அதற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிளாஷ்பேக்கில் இடம் பெற்ற 'நான் வரவா' பாடலும் புகை பிடிப்பது, மது அருந்துவது பற்றிய வரிகளாக இருந்ததால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் படத்தின் நெகட்டிவ் விமர்சனத்திற்கு ஒரு காரணமாக இருந்தது.




