விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜெய் பிறந்தநாள் இன்று. அதை முன்னிட்டு, அவர் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. சந்தீப் கிஷனை வைத்து அவர் இயக்கும் படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. அதற்கு தமன் இசையமைக்கிறார். இந்த ஆண்டு ரிலீஸ் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் கவுரவ வேடத்தில் நடிக்கிறாரா? மகனுக்காக பாடுகிறாரா? விஜய் தந்தையும் ஜேசன் தாத்தாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பங்களிப்பு உண்டா? பல படங்களில் பாடிய அவர் பாட்டி ஷோபா பேரன் படத்தில் பாடுகிறாரா? என்று விசாரித்தால், இது எதுவும் நடக்கவில்லை. தனது முதல்படத்தை சொந்த காலில் எடுக்க நினைக்கிறார் ஜேசன்.
குடும்பத்தினர், மற்றவர்கள் தலையீடு, உதவிகள், பங்களிப்பு இன்றி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மற்ற நிகழ்ச்சிகளுக்கு கூட விஜய் வர வாய்ப்பு இல்லை என்கிறார்கள். சினிமா இயக்குனர் ஆனாலும், இதுவரை எந்த சினிமா நிகழ்ச்சியிலும் ஜேசன் சஞ்ஜெய் கலந்து கொள்ளவில்லை. எந்த மீடியாவுக்கு பேட்டி கொடுத்தது இல்லை. பட ரிலீஸ் சமயத்தில் பேச வாய்ப்பு உள்ளது. தனது சினிமா ஆசை, அப்பா பாசம், இந்த படம் குறித்து மனம் திறந்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது. இன்று இயக்குனர் பிறந்தநாள் என்பதால் அந்த படம் குறித்த ஏதாவது அப்டேன் வரும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.