ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், நாகார்ஜூனா, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்த பிறகு இன்று வரை உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால் தற்போது குறிப்பிட்டு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முதல் முறையாக மலையாள மொழி படத்தில் அறிமுகமாகிறார் என அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பின் படி, ஹோம் படத்தை இயக்கிய ரோஜின் தாமஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ஜெயசூர்யா உடன் இணைந்து நடிக்கின்றார். இதற்கு 'கத்தனார்' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது சரித்திர கதைகளம் கொண்ட திரைப்படம். இரண்டு பாகங்களாக உருவாகும் என கூறப்படுகிறது.