கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' |
மலையாளத்தில் கடந்த வருடம் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் கடுவா. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் நிஜத்தில் வாழ்ந்த கடுவாக்குன்னல் குருவச்சன் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. படம் முழுவதுமே பிரித்விராஜ் மற்றும் விவேக் ஓவராய் இருவருக்குமான ஈகோ யுத்தமாகவே உருவாக்கப்பட்டிருந்தது.
ஆக்சன் படமாக உருவாகியிருந்தாலும் இந்த படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற டைட்டில் பாடலான பாலாப்பள்ளி என்கிற பாடல் படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பாடல் வெளியாகி சரியாக ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது யூட்யூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய பெருமையை பெற்றுள்ளது.
இந்த பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். நாட்டுப்புற பாடல் பாணியில் உருவாகி இருந்த இந்த பாடலை அதுல் நருகரா என்பவர் பாடியிருந்தார். பாடல் வரிகளை சந்தோஷ் வர்மா, ஸ்ரீஹரி தரயில் ஆகியோர் எழுதியிருந்தனர்.
கடந்த வருடத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிப்பில் அறிமுக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் இசையில் வெளியான ஹிருதயம் படத்தில் இடம்பெற்ற தர்ஷனா என்கிற பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்த இன்னொரு பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.