கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
கான கந்தர்வன் என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தந்தையை பின்பற்றி பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்தார். இன்னும் ஒரு சில படங்களில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் கூட நடித்துள்ளார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடித்திருந்ததாகவும் சில காரணங்களால் அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்றும் ஒரு பேட்டியில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் ஜேசுதாஸ்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் எனது இரண்டாவது பட இயக்குனரும் கூட. அவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது என்றும் இயக்குனர் மணிரத்னத்திடம அதில் நீங்கள் நடிப்பது பற்றி சொல்லி வைத்திருக்கிறேன் என்றும் கூறினார். அதன்படி ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது.
படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதும் என் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என கூறினார்கள். நானும் ஒப்புக்கொண்டாலும் நீளமாக வளர்த்திருந்த தாடியை மட்டும் எடுப்பதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு கதாபாத்திர தோற்றத்தில் என்னை புகைப்படம் எடுத்து மணிரத்னத்திடம் காட்டினார்கள். அவரும் சரி என்றார். அதன்பிறகு படகில் பயணிப்பது போன்று ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அவ்வளவுதான்.. நான் திரும்பி வந்து விட்டேன்..
அதன்பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் என்னை வரவழைத்தார்கள். குதிரையில் சவாரி செய்ய வேண்டி இருந்தது. அந்த சமயத்தில் விக்ரமும் அருமையாக குதிரை சவாரி செய்தார். அதன்பிறகு படம் வெளியானபோது பார்த்தால் என்னுடைய காட்சி படத்தில் இடம் பெறவில்லை. மணிரத்னம் டைரக்ஷனில் நடித்திருந்தும் அவரது படத்தில் வெளியே தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்” என்று கூறியுள்ளார் விஜய் யேசுதாஸ்.