ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இயக்குனர் மிஷ்கின் தனது முதல் படமான சித்திரம் பேசுதடி படத்திலிருந்து தனது ஒவ்வொரு படத்திலும் பாடல்கள், பின்னணி இசை என இரண்டுக்குமே மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். இளையராஜா உட்பட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் தான் விரும்பும் விதமாக இசையமைக்க வேண்டும் என்பதற்காகவே அரோல் குரோலி என்பவரை பிசாசு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். டைரக்சனில் இருந்து ஒரு கட்டத்தில் நடிகராகவும் புரமோஷன் பெற்ற மிஷ்கின் விஜய்யின் லியோ, சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர், நடிகர் என்பதை தாண்டி தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் மிஷ்கின். தனது சகோதரரும் 'சவரக்கத்தி' படத்தின் இயக்குநருமான ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கும் 'டெவில்' என்ற படத்தில் தான் இசையமைக்க உள்ளார் மிஷ்கின். இதுபற்றி ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் விதார்த் மற்றும் பூர்ணா இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.