'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன |
நகைச்சுவை நடிகர், கதையின் நாயகன் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகர் யோகிபாபு, ஒரு பக்கம் சிறிய நடிகர்களின் படங்களின் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தாலும், ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வருகிறார். குறிப்பாக தர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி சமீபத்திய விழா ஒன்றில் கலந்துகொண்ட யோகிபாபு பேசும்போது, “தர்பார் படத்தில் ஓரளவுக்கு ஓட்டியிருந்தோம் இந்த படத்தில் புல்லாவே ஓட்டியிருக்கோம். ஜெயிலர் படத்தில் காமெடி வித்தியாசமாக இருக்கும். உடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுப்பார் ரஜினி” என்று கூறியுள்ளார்.
தர்பார் படத்தில் ரஜினிகாந்த், யோகிபாபு இருவரின் காமெடி நன்றாகவே ஒர்க்-அவுட் ஆனது. தற்போது யோகிபாபு கூறியுள்ள தகவலின்படி ஜெயிலர் காமெடியும் ரசிக்கப்படும்படியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.