டிசம்பர் 22ல் 'சலார்' ரிலீஸ்… - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காவிரி எங்களுடையதே... - பிரகாஷ்ராஜின் இரட்டை வேடம் அம்பலம் | பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி |
மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான படம் லூசிபர். இந்த படத்தின் மூலம் நடிகர் பிரித்விராஜ் முதல் முறையாக இயக்குனராகவும் அடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே அனுபவப்பட்ட இயக்குனர் போல கமர்சியல் அம்சங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக இந்த படத்தை அவர் இயக்கி இருந்தார். மலையாள திரையுலகில் 200 கோடி வசூலித்த முதல் படமாகவும் இது சாதனை செய்தது. இந்த படத்தின் கதையை நடிகரும் கதாசிரியருமான முரளி கோபி என்பவர் எழுதியிருந்தார். மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'எல்2 ; எம்புரான்' என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என இரண்டு வருடங்களுக்கு முன்பே பிரித்விராஜ், மோகன்லால் இணைந்து அறிவித்தாலும் இவர்கள் இருவரும் தங்களது படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் இந்த படத்தை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
அதேசமயம் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கேஜிஎப் மற்றும் காந்தாரா ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனமும் இந்த படத்தில் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கேஜிஎப் படத்தை நடிகர் பிரித்விராஜ் தான் கேரளாவில் வெளியிட்டார். அதுமட்டுமல்ல இதே ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கும் டைசன் என்கிற படத்தையும் பிரித்விராஜ் இயக்குகிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. மேலும் எம்பிரான் படத்தின் பட்ஜெட்டும் அதிகம் என்பதால் இந்த ஹோம்பலே நிறுவனத்தையும் நட்புக்காக இந்த படத்தின் தயாரிப்பில் இணைத்துள்ளார் பிரித்விராஜ்.