'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மலையாள திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு 50 கோடி வசூல் என்பதே கனவாக இருந்தது, திரிஷ்யம் படம் மூலம் முதல் 50 கோடி வசூலும், புலி முருகன் படம் மூலம் முதல் 100 கோடி வசூலும், லூசிபர் மூலம் முதல் 200 கோடி வசூல் என கடந்த பத்து வருடங்களில் மலையாள சினிமா தனது வியாபார எல்லையை விரிவு படுத்தியுள்ளது. இருப்பினும் மலையாள திரையுலகில் 100 கோடி வசூல் இலக்கு என்பது இப்போதும் பலருக்கு எட்டாக்கனியாக தான் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கிய இந்த படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, நரேன், வினீத் சீனிவாசன் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்திருந்தனர். கேரளாவில் கடந்த 2018ல் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. அதனாலோ என்னவோ இந்த படத்திற்கு கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இந்த 10 நாட்களிலேயே 100 கோடி வசூல் என்கிற மாபெரும் இலக்கை எளிதாக தொட்டுள்ளது இந்த படம். குறிப்பாக கேரளாவில் மட்டும் 44 கோடி வசூலித்துள்ளது. இதற்கு முன்பு மோகன்லால், பிரித்விராஜ், திலீப், துல்கர் சல்மான் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் இதேபோன்று 100 கோடி இலக்கை அடைந்திருந்தாலும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள ஹீரோக்கள் இணைந்து நடித்த ஒரு படம் தற்போது இந்த இலக்கை தொட்டிருப்பது மலையாள திரையுலகை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக மோகன்லாலின் லூசிபர் திரைப்படம் எட்டு நாட்களில் 100 கோடி வசூலித்து இருந்தது. அதற்கு அடுத்த இடத்தை இந்த 2018 திரைப்படம் பிடித்துள்ளது.