''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். முதலில் இப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. உடல் நலக்குறைவு காரணங்களால் அவர் இத்திரைப்படத்தை விட்டு விலகியுள்ளார்.
ராஷ்மிகா நடிக்கும் இந்த படத்திற்கு ரெயின்போ என தலைப்பு வைத்துள்ளனர். புதுமுக இயக்குனர் சாந்த ரூபன் இந்த படத்தை இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தேவ் மோகன் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று நடபெற்றது. வரும் ஏப்ரல் 7 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
நடிகை ரஷ்மிகா கூறுகையில், "ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்" என்று கூறியுள்ளார்.