கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
எல்லா முன்னணி நடிகர்களுமே ஒரு படத்திலாவது போலீசாக நடித்து விடுவார்கள், கைதியாகவும் நடித்து விடுவார்கள். எம்ஜிஆர் ஏராளமான படங்களில் போலீசாக நடித்துள்ளார். ஆனால் அவர் கைதியாக நடித்த ஒரே படம் 'அந்தமான் கைதி'.
'அந்தமான் கைதி' என்பது கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாடகம். மிகவும் பிரபலமான இந்த நாடகத்தை டிகேஎஸ் சகோதரர்கள் நடத்தி வந்தார்கள். இந்த நாடகம்தான் 1952ம் ஆண்டு திரைப்படமானது.
இந்த படத்தை முதலில் கே.சுப்பிரமணியம் இயக்கினார். சில பிரச்னைகள் காரணமாக அவர் விலகி கொள்ள வி.கிருஷ்ணன் இயக்கினார். எம்.ஜிஆருடன், திக்குரிசி சுகுமாரன் நாயர், கே.சாரங்கபாணி, எம்.ஆர்.சுவாமிநாதன், எஸ்.டி.சுப்புலட்சுமி, பி.கே.சரஸ்வதி, எம்.எஸ்.திரவுபதி, டி.என். சிவதாணு, எம்.ஆர்.சுவாமிநாதன், எம்.எஸ்.கருப்பையா, கே.எஸ்.பாலையா மற்றும் கே.எஸ்.அங்கமுத்து ஆகியோரும் நடித்தனர்.
அந்தமான் சிறையில் இருந்து தப்பும் ஒரு ஆயுள் தண்டனை கைதி தமிழ்நாட்டுக்கு வந்து தன் குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்குவததான் நாடகத்தின் கதை. ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு அந்தமான் சிறையில் ஆயுள் கைதிகள் அடைக்கப்படுவதில்லை என்பதால் திரைப்படத்தில் கதை மாற்றப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைபோது வடநாட்டில் பெரிய கலவரம் நடந்தது. இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் குடும்பம் தப்பி சென்னை வருகிறது. அந்த குடும்பத்தின் மகன்தான் எம்ஜிஆர். வந்த இடத்தில் எம்ஜிஆரின் மாமன் சாரங்கபாணி அவரின் தந்தையை கொன்று சொத்துக்களை பிடுங்கி, எம்ஜிஆரின் தங்கையை வில்லன் டி.எஸ்.பாலையாவுக்க திருமணம் செய்து வைக்கிறார்.
அதோடு ஒரு பொய்யான வழக்கில் எம்ஜிஆரை சிக்க வைத்து சிறையில் அடைக்கிறார். சிறையில் இருந்து விடுதலையாகும் எம்ஜிஆர் வில்லன்களை பழிவாங்கி விட்டு மீண்டும் சிறைக்கு செல்வதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் இருந்துதான் எம்ஜிஆர் தனது பெயரை ராமச்சந்தர் என்பதில் இருந்து மாற்றி எம்.ஜி.ராமச்சந்திரன் என்று குறிப்பிடத் தொடங்கினார். அப்போது மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்த திக்குரிச்சி சுகுமாறன் நாயர், எம்ஜிஆருடன் இணைந்து நடித்த ஒரே படம்.