''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
நடிகர் ரோபா சங்கரின் சமீபத்திய புகைப்படங்களில் அவரது உடல் எடை மிகவும் குறைந்து காணப்படுவது குறித்து பல வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அவருக்கு ஏதோ வியாதி என்றும், சிலர் படத்தின் கெட்டப்பிற்காக ரோபோ சங்கர் சிக்ஸ் பேக் வைக்கப்போகிறார் என்றும் தங்களுக்கு தோன்றியதையெல்லாம் எழுதி வருகின்றனர். இந்நிலையில், ரோபோ சங்கரின் உறவினரும், நெருங்கிய நண்பருமான போஸ் வெங்கட் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்தார்.
அதில், 'ரோபோ சங்கருக்கு உடலில் சில பிரச்னைகள் ஏற்பட்டதும் அவர் உடல் எடை குறைந்திருப்பதும் உண்மை தான். யாருக்கு வேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம். அது போலத்தான் ரோபோ சங்கருக்கும் உடலில் சில பிரச்னைகள் ஏற்பட்டது. அதற்கு பல நெகட்டிவான காரணங்கள் சொல்லப்படுவதை பார்க்க முடிகிறது. ஆனால், விரைவில் ரோபோ சங்கர் பூரண நலமடைந்து பழைய நிலைக்கு திரும்பி வருவார்' என்று அதில் கூறியுள்ளார்.