மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” | 2024 - முத்திரை பதித்த முத்துக்கள்... |
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மகளான ஜான்வி கபூர் தனது தாயை போலவே நடிப்பில் அடி எடுத்து வைத்து கடந்த சில ஆண்டுகளாக நடித்து வருகிறார். குறிப்பாக மலையாளத்தில் ஹிட்டான, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உருவாகியுள்ள படங்களை தேர்ந்தெடுத்து அதன் ரீமேக்கில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.
தற்போது ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார் என்றும் லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படத்தில் கார்த்தி ஜோடியாக அவர் நடிக்க இருக்கிறார் என்றும் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரவி வந்தது.
இந்த நிலையில் இந்த செய்தி பற்றி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார் ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவி, “அன்பு மீடியா நண்பர்களே.. ஜான்வி கபூர் எந்த ஒரு தமிழ் படத்திலும் இப்போதைக்கு நடிக்கவில்லை என்பதை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதனால் தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.