'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நடிப்பில் உருவான லால் சிங் சத்தா என்கிற படம் கடந்த வியாழனன்று வெளியானது. இந்த படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க, முக்கிய இடத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா நடித்துள்ளார். அத்வைத் சந்தன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தி மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதற்காக ஹைதராபாத், சென்னை என நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட ஆமிர்கான் கலந்து கொண்டார். தெலுங்கில் இந்த படத்தை நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டார்.
ஆனால் இந்த படம் ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே ஆமிர்கான் படத்தை புறக்கணியுங்கள் என்கிற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனது.. ஆமிர்கான் இதற்கு முன்னதாக நடித்த பல படங்களில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால், இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என பலரும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் படத்திற்கும் கூட எந்த மொழியிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது இதை சுட்டிக்காட்டி உள்ள தெலுங்கு திரைகயுலகின் முன்னாள் சீனியர் நடிகை விஜயசாந்தி, ஆமிர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு தோல்வியை பரிசளித்ததற்காக ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் தெலுங்கில் இந்த படத்தை வெளியிடுவதற்காக திரையுலக பிரபலங்கள் என்னதான் துணையாக நின்றாலும் மக்கள் இந்த படத்திற்கு தர வேண்டிய சரியான ரிசல்ட்டை கொடுத்துள்ளனர்.. இனிவரும் நாட்களில் ஆமிர்கானை வைத்து படம் எடுக்க இருப்பவர்கள் அவர்களது படத்திற்கு என்ன விதமான ரிசல்ட் கிடைக்கும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் விஜயசாந்தி.