சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பாலிவுட்டில் ரக்ஷா பந்தனை ஒட்டி ஆமீர்கான் தயாரித்து, நடித்த லால் சிங் சத்தா மற்றும் அக்சய் குமார் நடித்த ரக்ஷா பந்தன் படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஆனால் இந்த இரண்டு படங்களுமே முதல் நாளில் வசூல் ரீதியாக மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்திருப்பதாக தகவல்களை வெளியாகி உள்ளன. பெருவாரியான தியேட்டர்களுக்கு ரசிகர்களை வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஆமீர்கானின் லால் சிங் தத்தா படம் 1300 காட்சிகள் முதல் நாள் திரையிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆயிரம் காட்சிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படம் முதல் நாளில் 10.75 கோடி வசூல் செய்து இருப்பதாக பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன . இதுவரை ஆமீர்கான் நடித்து வெளியான படங்களின் முதல்நாள் வசூலில் இதுவே மிக குறைவானது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஹாலிவுட்டில் வெளியாகி பல ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஒரு படத்தின் ஹிந்தி ரீமேக் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருப்பது பாலிவுட் சினிமாவையே அதிர விட்டு இருக்கிறது.