இளையராஜாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க பரிசீலனை? | ஆன்லைன் முன்பதிவில் சாதனை படைத்த 'எல் 2 எம்புரான்' | அடுத்த மூன்று முக்கிய வெளியீடுகளில் இசை ஜிவி பிரகாஷ்குமார் | ‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? | 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தரும் வின்சென்ட் செல்வா | 'எம்.குமரன்' ரீ-ரிலீஸ் : நதியா மகிழ்ச்சி | குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகும் தேதி, ரசிகர்கள் அதிர்ச்சி |
பாலிவுட்டின் வசூல் நாயகர்களில் ஒருவர் எனப் பெயரெடுத்தவர் அக்ஷய் குமார். அவருடைய படங்கள் வழக்கமாக ரசிகர்களுக்குப் பிடித்த படங்களாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் அக்ஷய்குமாருக்கு சரியாக அமையவில்லை. இந்த ஆண்டில் அவர் நடித்து வெளிவந்த “பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ்'' ஆகியவை தோல்விப் படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளிவந்த 'ரக்ஷா பந்தன்' படமும் தோல்விப் படமாகவே அமைந்துள்ளது.
சுமார் 70 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வெளியான நான்கு நாட்களில் 28 கோடி ரூபாய் வரையில்தான் வசூலித்துள்ளது. ஒரு நாள் கூட 10 கோடி ரூபாய் வசூலைத் தாண்டவில்லை. ஹிந்தித் திரையுலகத்தில் இந்த ஆண்டு முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் வெளிவந்த அமீர்கான் நடித்த 'லால் சிங் சத்தா' படமும் தோல்வியைத்தான் தழுவியுள்ளது.