ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மதுரை மாவட்டம் நிலையூரைச் சேர்ந்தவர் செந்தில். தீவிர ஜெயம் ரவி ரசிகரான இவர், ஜெயம்ரவி ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தார். இவர் அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த ஜெயம் ரவி மதுரை நிலையூரில் உள்ள செந்திலின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செந்திலின் மனைவி மற்றும் இரு குழந்தைகளைச் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். மேலும், செந்திலின் குடும்ப வறுமையைப் போக்க ரூ.5 லட்சத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், இரு குழந்தைகளுக்குமான கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.