ஜுன் 2ல் இரண்டு படங்களுக்கே முக்கிய போட்டி | மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது | யாஷிகா ஆனந்த் - அஜித் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி காதலா...? | 37 ஆண்டுகளை நிறைவு செய்த 'விக்ரம்' | பாபா படத்தை தொடர்ந்து மற்றொரு ரஜினி படம் ரீ ரிலீஸ் | கதாநாயகன் ஆகும் பிக்பாஸ் பிரபலம் | மும்பையில் தனுஷ்... மீண்டும் ஒரு பாலிவுட் படம் | த்ரிஷா படத்தில் கெஸ்ட் ரோலில் மூன்று பிரபல ஹீரோக்கள் | நாயகன் படம் போன்று இருக்கும் : கமல் | 150 வயது வரை வாழும் வித்தை எனக்கு தெரியும் : சரத்குமார் |
சாய்பல்லவி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் தெலுங்கு படம் விராட பருவம். இதில் ராணா நக்சலைட்டாக நடித்திருக்கிறார். சாய்பல்லவி அவரது காதலியாக நடித்திருக்கிறார். படம் வருகிற 17ம் தேதி வெளிவருவதை தொடர்ந்து அதன் புரமோசன் பணிகளில் பிசியாக இருக்கிறார் சாய்பல்லவி.
ராணாவும், சாய்பல்லவியும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். சாய்பல்லவியை காண ஆயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியில் கூடுகிறார்கள். சாய் பல்லவியுடன் சேர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் நெருக்கி அடித்துக்கொண்டு அவர் அருகில் வந்து விடுகிறார்கள். அப்படி ரசிகர்கள் வந்தபோது சாய் பல்லவியை அவர்களிடம் இருந்து பத்திரமாக காப்பாற்றினார் ராணா. நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா.
இதுகுறித்து சாய்பல்லவியிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது, அவர் நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எனக்கு ஒரு பவுன்சர்போல இருந்தார். ராணா மிகச்சிறந்த மனிதர், சிறந்த மனிதாபிமானி என்று கூறியிருக்கிறார் சாய்பல்லவி.