நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் வைஷ்ணவி பிரசாத். இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பிசியாக செயல்படும் அவர் தற்போது தனது சமூகவலைதளத்தில் ஒரு பரபரப்பான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் நான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வருகிறார். அடிக்கடி வீட்டு வாசல் வரை வந்து என்னை தொந்தரவு செய்கிறார். அந்த மர்ம இளைஞர் என்னை மிரட்டுவதைபோல பின்தொடர்ந்து வருகிறார், நான் தங்கியிருக்கும் வீட்டை அந்த வாலிபர் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக வெளியே சென்று 30 நிமிடம் வரை வீட்டுக்கு செல்லாமல் வெளியில் காத்திருந்து பின்னர் வீட்டுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். என்று அவர் கூறியிருக்கிறார்.
அதோடு பின் தொடரும் நபர் பற்றிய வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். வைஷ்ணவியின் புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இது போன்ற நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவல் உதவி என்ற செய்தியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை போலீசார் சமூக வலைதள பக்கம் மூலம் பதில் அளித்துள்ளனர்.