23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் சின்னா. நடிகை நந்திதா என்கிற ஜெனிபரின் தந்தை. 69 வயதான சின்னா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார்.
200 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக சின்னா பணியாற்றினார். பாக்கியராஜ் இயக்கிய தூரல் நின்னு போச்சு படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள் ஆகிய படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றினார். வாங்க மச்சான் வாங்க, உன்னை விட மாட்டேன், அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, செந்தூர பாண்டி, நேசம் போன்றவை அவர் பணியாற்றிய முக்கியமான படங்கள்.