ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் |

பாடகராகவும், பாடலாசிரியராகவும், நடிகராகவும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அருண் ராஜா காமராஜ், கனா படத்தில் இயக்குனராக உருவெடுத்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது திரைக்கு வந்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கினார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக அருண் ராஜா காமராஜ் இயக்கும் படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கனா படத்தை அடுத்து கார்த்தியை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் அருண் ராஜா காமராஜ். அப்போது அவர் பல படங்களில் பிசியாக இருந்துள்ளார். அதன்காரணமாகவே உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை அடுத்தபடியாக இயக்குவதற்கு தயாராகிவிட்டார் அருண்ராஜா காமராஜ்.
பல மொழி படமாக உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க தென்னாப்பிரிக்காவில் நடக்கும் கதையில் உருவாகிறதாம். இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது ராஜூமுருகன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் கார்த்தி. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அருண் ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார்.