ரஜினி, கமல் இணையும் கதை இதுதானா? | நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” |
இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற சரித்திரப் படத்தை இயக்கி இருக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வனுக்காக படமாக்கப்பட்ட பல காட்சிகள் மணிரத்னத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், அதனால் அந்த காட்சிகளை அவர் மீண்டும் ரீசூட் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அந்தத் தகவலை படக்குழு மறுத்துள்ளது. பொன்னியின் செல்வனுக்காக படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் மணிரத்னத்துக்கு திருப்தியாக இருப்பதாகவும், தற்போது அவர் இறுதிக்கட்ட பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்து அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.