பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! |

கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் கடந்த 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டு வருகிற 28ஆம் தேதி தேதி வரை நடக்கிறது. இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பல நாடுகளைச் சார்ந்த திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்தும் பல பிரபலங்கள் கவுரவிக்கப்பட்டார்கள். இந்நிலையில் நேற்று கேன்ஸ் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நிர்வாணமான நிலையில் அங்கு வந்த ஒரு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உடம்பில் எங்களை கற்பழிப்பதை நிறுத்துங்கள் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய படையினர் அங்கு உள்ள பெண்களை கற்பழித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பெண் கேன்ஸ் பட விழாவில் நிர்வாண போராட்டம் நடத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்படி திரைப்பட விழா நடந்து கொண்டிருந்த பகுதியில் நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்வு கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.




