டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
‛நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார். ஏற்கனவே அஜித், நடித்த என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற மற்றும் வலிமை படத்திலும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்போது அவரின் படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
இந்தநிலையில் ஒரு பேட்டியில் அப்படம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அஜித்தின் 62வது படத்தை மிக வித்தியாசமான கதையில் இயக்கப் போகிறேன். என்னுடைய 100 சதவீத உழைப்பையும் முயற்சியையும் இந்த படத்துக்காக கொடுப்பேன் . அதனால் இந்த படத்தில் இதுவரை பார்க்காத ஒரு அஜித் குமாரை ரசிகர்கள் பார்க்கலாம். தரமான படமாகவும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் படமாகவும் இது கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.