சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் | எஸ்.பி.பி.,யின் 75வது பிறந்த நாள்: இசை நிகழ்ச்சிக்கு சரண் ஏற்பாடு | திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம் | முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் |
மலையாள நடிகர் நிவின் பாலி, இயக்குனர் ராஜூவ் ரவி இயக்கத்தில் துறைமுகம் என்ற புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். துறைமுகம் பகுதியில் வாழும் மீனவ மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மீனவ மக்களுக்கு எதிராக நடந்த அநீதியை தட்டி கேட்கும் ஹீரோவாக நிவின் பாலி நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் இந்திரஜித் சுகுமாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் திட்டமிட்டப்படி படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் இந்த படம் வெளியாகிறது.