பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

பாடப்புத்தகங்களிலும் தேர்வு வினாத்தாள்களிலும் சினிமாவை பற்றிய, சினிமா பிரபலங்களை பற்றிய ஏதாவது ஒரு கேள்வியோ அல்லது கட்டுரையோ இடம் பெற்று அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. இப்போது லேட்டஸ்டாக ஜூனியர் என்டிஆர் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். தற்போது தெலங்கானாவில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வு வினாத்தாள் ஒன்றில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர் பற்றி குறிப்பிடப்பட்டு அதுகுறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
அந்த கேள்வியில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் நடித்த ஜூனியர் என்டிஆரின் நடிப்பையும் பார்த்து ரசித்திருப்பீர்கள். இப்போது இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் ஒரு பேட்டியில் பங்கேற்றார் என்றால் ஒரு மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனத்தின் நிருபராக, நீங்கள் அவரிடம் என்ன கேள்வி கேபீர்கள்..?
1) படத்தின் தன்மை 2) படத்தின் இயக்குனருடன் அவருக்கு உள்ள உறவு 3) படத்தின் ஸ்கிரிப்ட்டை பற்றி 4) படத்தில் அவரது அர்ப்பணிப்பு பற்றி 5) பார்வையாளர்களிடம் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து, என ஐந்து பதில்களும் தரப்பட்டு இதில் ஒன்றை தேர்வு செய்து பதிலளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த வினாத்தாள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.