'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டால் அரசாங்க வேலையை கூட உதறிவிட்டு ஓடிவரும் ஆட்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சில படங்களில் நடித்து வந்த நடிகர் ஒருவர் தற்போது அரசு வேலை கிடைத்து இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். அரசாங்க வேலை என்றாலும் அவருக்கு கிடைத்துள்ளது துப்புரவு பணியாளர் பணி என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயமே..
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஆபரேஷன் ஜாவா என்கிற படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் உன்னி ராஜன். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு துப்புரவு பணியாளருக்கான அரசாங்க வேலை கிடைத்துள்ளது.
இந்த வேலையின் தன்மை குறித்து தெரிந்தேதான் இதில் நான் சேர்ந்துள்ளேன்.. நேர்முகத் தேர்வில் கூட இதே பதிலைத்தான் அதிகாரிகளிடம் கூறினேன் என்று கூறியுள்ளார் உன்னி ராஜன்.. மாதந்தோறும் நிரந்தர வருமானம் வேண்டும் என்பதற்காகவே அவர் சினிமாவை விட்டு விலகி இந்த வேலையில் சேர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.