சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

நடிகர் ஜெயராம் மலையாள நடிகராக அறியப்பட்டாலும் தமிழில் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பே கோகுலம், கோலங்கள் உள்ளிட்ட படங்களில் நடிக்க துவங்கி தமிழ் நடிகராகவும் மாறிவிட்டவர். சமீபகாலமாக தெலுங்கிலும் அவருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்த நிலையில் அவர் முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகமான அபரன் என்கிற திரைப்படம் வெளியாகி நேற்றோடு 34 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த படத்தை இயக்குனர் பத்மராஜன் இயக்கியிருந்தார். கதாநாயகியாக ஷோபனா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெயராம். இதில் ஜெயராம் சில சாதனைகளை செய்துள்ளார். சில ஆச்சர்யங்களும் நடந்துள்ளன.
அறிமுகமான முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஜெயராம். அதேசமயம் அதில் ஒன்றில் கதாநாயகனாகவும் இன்னொன்றில் வில்லனாகவும் நடித்து இருந்தார். அழகிய தமிழ்மகன் பாணியில் தவறுகளை தான் செய்துவிட்டு தன்னைப்போல் இருக்கும் நல்லவன் மேல் பழியைப் போடும் வில்லனின் கதைதான் இந்த படம். இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நடிகர் ஜெயராமின் மனைவியான பார்வதி, இந்த படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார் என்பது தான். பின்னாளில் அடுத்தடுத்த படங்களில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது. அந்த வகையில் ஜெயராமின் வாழ்க்கை துணையும் அவரது முதல் படத்திலேயே அவருக்கு கிடைத்துவிட்டது ஆச்சரியமான விஷயம்தான்.