ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

மணிரத்னம் இயக்கத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்த படம் தக் லைப். ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியானது. ஆனால் முதல் நாளிலிருந்தே இந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. 250 கோடியில் தயாரிக்கப்பட்டு 97 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. தற்போது இந்த படம் திரைக்கு வந்து 28 நாட்கள் ஆகும் நிலையில் இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த படம் கன்னடத்தில் வெளியாகாத நிலையில் தற்போது ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.