ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மா கா பா மற்றும் ப்ரியங்கா ஜோடி இணைந்து சுவாரசியமாக தொகுத்து வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்ட போது ப்ரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதிலாக மைனா நந்தினி மா கா பா உடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் வந்த ப்ரியங்கா நிகழ்ச்சியில் ஆங்கராக எண்ட்ரி கொடுத்ததால் நந்தினி வெளியேறினார். ஆனால் ப்ரியங்கா, பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுடன் மீட்டிங் என அடிக்கடி ப்ரேக் என கழன்று சென்றதால் ஒருவார எபிசோடிலேயே அவருக்கு பதிலாக மீண்டும் மைனா நந்தினி உள்ளே நுழைந்தார்.
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் ப்ரியங்கா ஆங்கராக என்ட்ரி கொடுத்துள்ளார். அதேசமயம் ஏற்கனவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மா கா பாவும் மைனா நந்தினியும் வெளியேறியுள்ளனர். மா கா பாவுக்கு பதிலாக கலக்கப் போவது யாரு குரேஷி ப்ரியங்காவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இது என்ன உள்ளே வெளியே ஆட்டம் என ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர். விஜய் டிவி நிகழ்ச்சி வரலாற்றிலேயே ஆங்கர்கள் இந்த அளவுக்கு ஸ்வாப் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதற்கான தெளிவான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இந்த வாரம், தல - தளபதி ரவுண்டாக ஸ்பெஷல் எபிசோடு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா கலந்து கொள்கிறார். ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.