அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சின்னத்திரை பிரபலங்கள் தற்போது சினிமா நடிகர்களுக்கு இணையாக பெயரையும், பணத்தையும் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துராடி சொகுசு காரினை வாங்கியுள்ளார். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற அந்த காரின் விலை சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்.
தற்போது இந்த காரினை வாங்கியுள்ள சரண்யா துராடி முதல் வேலையாக மருதமலை கோயிலுக்கு சென்று அங்கு பூஜையை போட்டுவிட்டு 'எல்லாம் அவன் செயல்' என்று கெத்தாக கார் முன் நின்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்த சரண்யா துராடி, வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்த அவர் நல்ல ப்ராஜெக்ட்டுக்காக காத்திருக்கிறார்.