ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்று டைட்டில் பட்டம் வென்றார். அதன்பின் சில தினங்கள் கழித்து சில பேட்டிகளில் பேசிய ராஜூ, இனி சீரியல்களில் நடிக்கப் போவதில்லை எனவும், சினிமாவில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், ராஜூக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஒரு சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ரசிகர்களும் ராஜூவை கத்தி கேரக்டரில் பார்க்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் அவர், 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' தொடரில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் இருவர் நமக்கு இருவர் 2 தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் கத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கி வந்த ராஜூ, பிக்பாஸ் வாய்ப்பினால் சீரியலை விட்டு விலகினார். ஆனால், அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கு இதுவரை வேறு நடிகரை தேர்வு செய்யவில்லை.
தற்போது கதையில் ஐஸ்வர்யா திருமணத்தில் ஏராளமான ட்விஸ்டுகள் வரப்போவதாகவும், இறந்து போனதாக காட்டப்பட்ட முத்துராசு மீண்டும் வந்து ஐஸ்வர்யாவை மிரட்டும் வகையில் தொடரில் பல திருப்பங்கள் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முத்துராசு கதாபாத்திரத்துடன் கத்தியும் திரும்ப வருவார் என்றும் கத்தி கேரக்டரில் ராஜூ தான் தொடரப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.