நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கினார். இவற்றில் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். தற்போது விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இதையடுத்து தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார் வினோத்.
இந்நிலையில் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆன வரிசையில் இயக்குனர் வினோத்தும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்குகிறார். கதாநாயகனாக சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான ராஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.