ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? | பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் |
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் பூஜா லோகேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பூஜா, கன்னடத்தை தொடர்ந்து தமிழிலும் பல சீரியல்கள் நடித்துள்ளார். இடையில் பல காலங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்த அவர், ஸ்டைலிஸ்ட் கன்சல்டண்ட்டாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது குஷ்புவுடன் இணைந்து மீண்டும் நடிக்கவுள்ளார். கலர்ஸ் தமிழில் குஷ்பு நடிப்பில் 'மீரா' என்ற புதிய தொடர் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. அந்த தொடரில் பூஜா லோகேஷ் கம்பேக் கொடுத்துள்ளார். இதுகுறித்து பூஜா கூறுகையில், 'நிச்சயம் நீங்கள் என்னை வெறுப்பீர்கள்' என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் 'மீரா' தொடரில் வில்லி கேரக்டரில் நடிக்க இருப்பதை சூசகமாக சொல்லியுள்ளார்.