ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் சுந்தர்.சி, நயன்தாராவுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் நயன்தாரா படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு இது குறித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து சில வதந்திகள் பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. இயக்குனர் சுந்தர்.சி ஒரு அனுபவமிக்க புத்திசாலியான இயக்குனர். அதேபோன்று நயன்தாராவும் ஒரு திறமையான தொழில் முறை நடிகை. அந்த வகையில் மூக்குத்தி அம்மன்-2 படப்பிடிப்பு எந்தவித சலசலப்பும் இன்றி அமைதியான முறையில் நடந்து வருகிறது. அதனால் இந்த வதந்தியை திருஷ்டி எடுத்த மாதிரிதான் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். பொழுதுபோக்கான ஒரு மிகச் சிறந்த மெகா ஹிட் படத்திற்காக அனைவரும் காத்திருங்கள் என்று தெரிவித்து இருக்கிறார் குஷ்பு.




