ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, 48, மாரடைப்பால் சென்னையில் நேற்று(மார்ச் 25) காலமானார். சில வாரங்களுக்கு முன் இதய பிரச்னையால் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருந்த வந்த மனோஜிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது உயிர் பிரிந்தது.
சென்னை, சேத்துபட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் மனோஜ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அதிமுக.,வின் ஜெயக்குமார், விஜய பாஸ்கர், பா.ஜ.,வின் அண்ணாமலை, காங்கிரஸின் செல்வப்பெருந்தகை, தேமுதிக.,வின் பிரேமலதா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விஜய், சூர்யா, சிவகுமார், சரத்குமார், ராதிகா, கேஎஸ் ரவிக்குமார், பிரபு, சுரேஷ் காமாட்சி, லிங்குசாமி, ஆர்கே செல்வமணி, நாம் தமிழர் கட்சியின் சீமான், பாடலாசிரியர் வைரமுத்து, கார்த்தி, டி சிவா, மாரி செல்வராஜ், ராம், ராஜ் கபூர், சித்ரா லட்சுமணன், இளவரசு, மணிரத்னம், சுஹாசினி, நாசர், பி வாசு, கவுண்டமணி, செந்தில், விதார்த், வசந்த், நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர், சந்தானபாரதி, சத்யராஜ், கருணாஸ், பாண்டியராஜன், பாண்டிராஜ், பாக்யராஜ், தம்பி ராமையா, சரவணன், பேரரசு, விஜய் சேதுபதி, சூரி, பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, விஜயகுமார், அருண் விஜய், எம்எஸ் பாஸ்கர், மன்சூர் அலிகான், சதீஷ், சிங்கம் புலி, விஜய் ஆண்டனி, கூல் சுரேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர், லிங்குசாமி உள்ளிட்ட ஏராளமான திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மனோஜ் உடல் சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அவரின் இரு மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தனர்.
இறுதிச்சடங்கு நடந்த மின்மயானத்தில் பாக்யராஜ், வைரமுத்து, சீமான், சித்ரா லட்சுமணன், சினேகன் உள்ளிட்ட சில பிரபலங்களும் பங்கேற்று பாரதிராஜாவை ஆறுதல் படுத்தினர்.
கமல், இளையராஜா போன்ற திரைப்பிரபலங்கள் இரங்கல் மட்டுமே தெரிவித்தனர். நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. ரஜினி, அஜித், விஷால், சிம்பு, போன்ற பல பிரபலங்கள் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.