'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
லவ் டுடே, டிராகன் போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து அவர் நடிக்கும் புதிய படத்தை அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்திருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு சாய் அபிநயங்கார் இசையமைக்கிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க, சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளது. இது குறித்த ஒரு போஸ்டர் அறிவிப்பை பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதேசமயம் இந்த படத்தின் துவக்கம் போஸ்டரை இன்று வெளியிடவில்லை. இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மறைவை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக மைதிரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.